தமிழகம்

தமிழகத்தில் 18 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று.! பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!

Summary:

Coronavid19

இந்தியாவில் கொரோன வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நோயால் இதுவரை தமிழகத்தில் மட்டும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் இந்நோயால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் தேசிய சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

அதில் 18வயது இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு அவர் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாகவும் அவரை வாலாஜா அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தாய்லாந்து நாட்டினருடன் பழகிய 66 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தற்போது பெருந்துறை மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மட்டும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. 


Advertisement