தமிழகம்

வேகமாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!! தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன தெரியுமா??

Summary:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,016 பேருக்கு புதிதாக கொரோனா நோய் பாதிப்பு கண

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,016 பேருக்கு புதிதாக கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக புதிதாக 14,016 பேருக்கு புதிதாக கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 23,53,721 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 267 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்கள் 25,895 பேர் தொற்றிலிருந்து குணம்அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,49,927 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேர பாதிப்பை பொறுத்தவரை, தலைநகர் சென்னையில் 935 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 1895 பேர், ஈரோட்டில் 1323 பேர். சேலம் (855), திருப்பூர் (820), தஞ்சாவூர் (615) மற்றும் செங்கல்பட்டு (563) ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் நோய் தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


Advertisement