தீபாவளியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்.! வரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை.! சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்.!

தீபாவளியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்.! வரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை.! சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்.!



corona-testing-should-be-further-enhanced-instruction-t

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக சற்று குறைந்து கொண்டு வருகிறது. அதேபோல் தற்போது பண்டிகை காலம், மழை மற்றும் விடுமுறைகளால் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் அதிக அளவில் கூடினர். குறிப்பாக, தீபாவளிக்கு முந்தைய நாள் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங் களில் உள்ள கடைகளில் கூட்டம் அலை மோதியது. 

மக்களில் பலர் முகக்கவசம் அணியாமல் பேருந்தில் பணம் செய்துள்ளனர். இதனால், கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே வரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது என்றும், இந்த காலங்களில் கொரோனா பரிசோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட் சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

corona

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேநேரத்தில் வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண் டும். முகக் கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இணை நோய்கள் உள்ளவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது.

கட்டுமானப் பகுதிகள், நிகழ்ச்சிகள் நடக் கும் இடங்கள், தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண் காணித்து நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளாவிடில், பல கொரோனா பாதிப்பை கண்டறியாமல் போய்விடும். எனவே இனிவரும் 14 முதல் 28 நாட்களும் மிகவும் முக்கியமானது. பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்ததுபோன்று தற்போது கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை அனுப்பியுள்ளார்.