தமிழகம் மருத்துவம்

தமிழகத்தின் வேலூரில் 3 பேருக்கு கொரோனா அறிகுறியா? யாரும் நம்ப வேண்டாம்!

Summary:

Corona symptoms in vellore


சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு,  தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை கடும் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் ஆரம்பத்தில் இருந்து, தமிழகத்தின் அணைத்து விமான நிலையங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு செய்பட்டு தீவிர கண்காணிப்பில் தமிழக சுகாதாரத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.


தமிழகத்தில், விமானநிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் என பொது இடங்களில் மருத்துவ குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், வேலூரில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் பேருந்து நிலையத்தில் மருத்துவ குழுவினர் நடத்திய மருத்துவ பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், 60 வயது மூதாட்டி உட்பட 3 நபர்களுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்களில் 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனவே கொரோனா குறித்து வீண்வதந்திகளை  பரப்பி பொதுமக்களை அச்சுறுத்த வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 


Advertisement