கொரோனா பரவலில் தமிழகம் எந்த நிலையில் உள்ளது.? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!.

கொரோனா பரவலில் தமிழகம் எந்த நிலையில் உள்ளது.? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!.



Corona status in tamilnadu

தமிழகத்தில் கொரோனா நோய் பரவுதல் 2-வது நிலையில் இருக்கிறது. ஆகவே 2-வது நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் அதிகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த கொடூர வைரஸ் பரவ தொடங்கியதால் பிரதமர் மோடி, நாடு முழுவதும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். கொரோனாவை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத் துறை கடும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

corona
இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா நோய் பரவலில் தமிழ்நாடு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது கொரோனா தமிழகத்தில் 2-வது நிலையில் உள்ளது. சமூகப் பரவலான 3-வது நிலைக்கு போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழகத்தில் கொரோனாவை 2-வது நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.