இந்தியா Covid-19

மகிழ்ச்சியான செய்தி.! இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்த கொரோனா தொற்று.!

Summary:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  1 கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. 

தேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 252 பேர் உயிரிழந்துள்ளனர். 
 இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 153 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,00 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்து 7 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement