தஞ்சையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! பள்ளிகளில் மட்டும் 142 பேருக்கு தொற்று.!corona increased thanjavur

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இதனால் இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், சமீப காலமாக கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது.

அதேபோல் தமிழகத்திலும் கொரோனா பரவல் குறைந்துகொண்டே வந்தது. ஆனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 1087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரத்து 450 ஆக அதிகரித்துள்ளது.

corona

இந்தநிலையில், தஞ்சையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவு பிறப்பித்தார்.