தமிழகம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா உறுதி! 4 நபர்களும் சென்னையில் இருந்து வந்தவர்கள்!

Summary:

corona increased in thirupur

திருப்பூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளியூரில் இருந்து திருப்பூர் வந்தவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நான்கு நபர்களும் சென்னையில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் 4 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 123 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை மாவட்டத்தில் சில பகுதியில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தின் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகர் சங்கங்களின்  சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், நாளை முதல் ஜூலை ஒன்றாம் தேதி வரை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருப்பூரில் வணிக நிறுவனங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது .
 


Advertisement