தமிழகம் Covid-19

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு? பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் ஆரம்ப காலத்தை விட பாதிப்பு தற்போது மிக குறைவு என்றே கூறலாம்.  காரணம் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.  பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அரசு தெரிவித்தது.

தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,64,989 ஆக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகம் இருந்த சென்னையில் இன்று மட்டும் 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,10,601 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனாவால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,550 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,251 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Advertisement