தமிழகம் Covid-19

ஆத்தாடி... தமிழகத்தில் மீண்டும் உச்சத்தை நோக்கி கொரோனா பாதிப்பு.! நேற்று மட்டும் எவ்வளவு தெரியுமா.?

Summary:

சமீப காலமாக நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும்

சமீப காலமாக நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அசுர வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல் தமிழகத்திலும், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு பிறகும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்த நேரிடும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 5,441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 20 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும்  23 பேர் கொரோனாவால்உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,863 ஆக அதிகரித்துள்ளது.  
 


Advertisement