மக்களே உஷார்..! தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! நேற்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

மக்களே உஷார்..! தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! நேற்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?


corona-increased-in-tamilnadu-ay52r6

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று மட்டும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,023 ஆக உயர்ந்துள்ளது. 

corona

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,145 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,00,434 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகப்படியாக கோவையில் நேற்று 188 பேருக்கும், சென்னையில் 181 பேருக்கும் அடுத்தபடியாக ஈரோட்டில் 166 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு மேற்கொண்டுவரும் தடுப்பு நடவடிக்கையாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் தான் கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.