தமிழகம் மருத்துவம் Covid-19

தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

Summary:

corona increased in tamilnadu


தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில்கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 1,162 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement