தமிழகம் Covid-19

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்க வாய்ப்பு.! வெளியான ஷாக் தகவல்.!

Summary:

இந்தியா முழுவதும் கொரோனா  பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமாக வருகிறது. தமிழகத்தில் ஆர

இந்தியா முழுவதும் கொரோனா  பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமாக வருகிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. 

கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்தநிலையில், தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்க வாய்ப்புள்ளதாக கொரோனா தடுப்பு சிறப்பு மேற்பாா்வை அலுவலர் தெரிவித்துள்ளாா்.

கொரோனா தடுப்பு சிறப்பு மேற்பாா்வை அலுவலர்  சித்திக் நேற்று சென்னை பல்லவன் சாலையில் உள்ள 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா பரிசோதனை செய்யும் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னையில் புதிய கொரோனா பரிசோதனை மையங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக இது போன்ற கூடுதல் பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்தப்படுகின்றன என தெரிவித்தார்.


Advertisement