தமிழகம் Covid-19

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு? பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

தமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் 31 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,924 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3,592 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 4,019 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் தற்போது 30,006 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement