அரசியல் தமிழகம்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Summary:

Corona increased in tamilnadu

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50-ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். 

இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50-ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது எனவும், கொரோனா தொற்றில் இருந்து 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள் எனவும்,  தமிழகத்தில் ஒருவர் மட்டும் தான் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


Advertisement