கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சென்னையை முந்திய கோவை.! ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?



corona-increased-in-coimbatore-2RHV9V

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் சென்னையை முந்தியுள்ளது கோவை மாவட்டம்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சென்னையை முந்தியுள்ளது கோவை மாவட்டம். கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் மட்டும் 4268 பேர் புதிதாக கொரானா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 3561 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronaஆனால் சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் கொரானா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை கோவையில் மட்டும் 151077 பேர் கொரானா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.