தமிழகத்தில், கொரோனா பரவலில் சென்னைக்கு அடுத்த இடத்தை பிடித்த கோவை.! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?



corona-increased-in-coimbatore

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28,978 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது தீவிரமாக பரவி வருவதால், தினசரி கொரோனா பாதிப்பு மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 232 பேர் உயிரிழந்துள்ளனர். 

corona

சென்னையில் ஒரே நாளில் 7,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து தமிழகத்தில் அதிகப்படியாக கொரோனாவுக்கு கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,781 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

தற்போது வரை மொத்தமாக 97,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.