சென்னையில் இதுவரை அல்லாத அளவிற்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!
நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 900ஐ கடப்பது இதுவே முதல்முறையாகும்.
தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,495-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்திலே சென்னையில் தான் ஆரம்பத்தில் இருந்து கொரோனா அதிகமாக பரவி வருகிறது. சென்னையில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு, நேற்றும் அதிகபட்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1,162 பேரில் சென்னையில் மட்டும் 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 900ஐ கடப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்தநிலையில் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 9 பேர் கொரோனாவால் பலியான நிலையில், சென்னையில் கொரோனாவால் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர்.