கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் இவ்வளவுதான் கட்டணம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு..

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் இவ்வளவுதான் கட்டணம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு..


Corona fees in Private Hospitals in Tamil Nadu

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான புது கட்டணம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைத்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகம் உள்ள காலங்களில் அதிக கட்டணமும், குறைவான காலங்களில் கட்டணம் குறைப்பையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்திவருகிறது. அந்தவகையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதை அடுத்து, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொரோனா சிகிச்சைக்கான புது கட்டணம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1 . தீவிரமில்லாத ஆக்ஸிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.3,௦௦௦
2 . தீவிரமில்லாத ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,௦௦௦
3 . வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 என்று கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணமானது 2 மாதங்களுக்கு பின் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.