தமிழகம்

தமிழக அரசின் புதிய முயற்சி.! சென்னையில் கொரோனாவிற்காக தயாரான எமெர்ஜென்சி மருத்துவமனை..!

Summary:

Corona emergency hospital opened in chennai

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் கொரோனாவால் தமிழகம் பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1200க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸால் தமிழகத்தில் மட்டும் 12 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்பாக கொரோனா சிகிச்சைக்காக ரயில்களை மருத்துவமனைகளாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. தற்போது சென்னை மாநகரம் ராமாபுரத்திலுள்ள டிரேட் சென்டரில் 2000 பேர் சிகிச்சைப் பெருமளவிற்கு ஒரு எமெர்ஜென்சி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் மட்டும் உருவாக்கப்பட்ட எமெர்ஜென்சி மருத்துவமனைகளை போல் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. 


Advertisement