90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
பாதிக்கு பாதியாக குறைந்த கொரோனா பாதிப்பு!! தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் இதோ..

தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் பலப்பகுதிகளில் படிப்படியாக கொரோனா பரவலின் வேகம் குறைந்துவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 17 ஆயிரத்து 321 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2319, ஈரோட்டில் 1405, சென்னையில் 1345, சேலத்தில் 957, திருப்பூரில் 913, செங்கல்பட்டில் 726, தஞ்சையில் 685, திருச்சியில் 510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 405 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.
சற்று ஆறுதலாக ஒரே நாளில் 31 ஆயிரத்து 253 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரையில் 20 லட்சத்து 59 ஆயிரத்து 597 பேர் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்கள்.
நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமாக தமிழகத்தில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது பாதிக்கு பாதியாக குறைந்திருப்பது மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.