தமிழகம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்! சோகத்தில் விவசாயிகள்!

Summary:

Cooperative Banks stopped gold loans

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டு வந்த நகைக்கடனை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன் உதவிகள் வழங்குவது நிறுத்தப்பட்டதால், நகைகளை வைத்து கடன்கள் பெற முடியாமால் கிராம மக்களும் , விவசாயிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா சமயத்தில் இந்த செய்தி விவசாயிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கடன் வழங்குவதற்கு மறு உத்தரவு வந்துவிடும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர் தமிழக விவசாயிகள்.


Advertisement