பள்ளிகளில் தொடரும் பாலியல் சீண்டல்கள்.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. கைதான ஆசிரியர்.. பரபரப்பு சம்பவம்..!

பள்ளிகளில் தொடரும் பாலியல் சீண்டல்கள்.. மாணவிக்கு பாலியல் தொல்லை.. கைதான ஆசிரியர்.. பரபரப்பு சம்பவம்..!


continued-sexual-harassment-in-schools-sexual-harassmen

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜூலியஸ் ரவிச்சந்திரன்.

இவர் அப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Sexual Harrasment

மேலும் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்காக வந்த அதிகாரிகளை அப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியரான ஜெயபால் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமறைவான நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த ஆங்கில ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.