பகீர் சம்பவம்... சாக்கடை குழிக்குள் ஆண் சடலம்... காவல்துறை தீவிர விசாரணை.!
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்கன்துறை என்ற கிராமத்தில் சாக்கடை குறிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டதால் பதற்றம் நிறைவு வருகிறது இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அருகே செங்கம் துறை கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகே ஜேம்ஸ் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் தனது ஹோட்டலை திறப்பதற்காக வந்திருக்கிறார் ஜேம்ஸ். அப்போது இவரது கடை அருகே ரத்தக்கரை படிந்திருக்கிறது மேலும் அடிதடி சம்பவங்கள் நடந்ததற்கான தடயங்களும் இருந்திருக்கின்றன. அப்பகுதியில் உள்ள சாக்கடை குழு யின் முடியும் திறந்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சாக்கடை குழிக்குள் பார்த்தபோது ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். அவர்கள உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் அப்பகுதியைச் சார்ந்த விஜயராகவன் என்று தெரிய வந்திருக்கிறது. அவரது உடலில் காயங்கள் இருப்பதால் இது குலையாக இருக்க கூடும் என காவல்துறை சந்தேகிக்கிறது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.