தண்ணீரை தொடாமல் உடலை சுத்தமாக வைத்திருக்கும் ஹிம்பா பெண்கள்! அது எப்படி தெரியுமா? திருமண நாளில் மட்டுமே ஒரே ஒரு நாள் குளியல்.... 50 ஆயிரம் மக்கள் பின்பற்றும் விசித்திர பாரம்பரியம்..!!!



himba-tribe-women-bathing-tradition-namibia

உடல் சுத்தத்திற்காக தினமும் குளிப்பது உலகம் முழுவதும் பொதுவான நடைமுறையாக இருக்கும் நிலையில், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் வாழும் ஹிம்பா பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முறை பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. வட நமீபியாவின் வறண்ட பகுதிகளில் வாழும் இப்பெண்கள், தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே தண்ணீரில் குளிப்பதாக கூறப்படுகிறது. பல தலைமுறைகளாக தொடரும் இந்த மரபு இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

சுமார் 50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஹிம்பா சமூகத்தினர், நவீன வாழ்க்கை முறைகளிலிருந்து விலகி தங்களது பாரம்பரிய பழக்கவழக்கங்களையே அதிகம் கடைப்பிடித்து வருகின்றனர். அப்பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக, பெண்கள் தண்ணீரைப் பயன்படுத்தி குளிப்பதோ, ஆடைகளைத் துவைப்பதோ வழக்கத்தில் இல்லை.

திருமண நாளில் மட்டும் தண்ணீர் குளியல்

ஹிம்பா பெண்களின் வாழ்க்கையில் தண்ணீரில் குளிக்கும் ஒரே நாள் அவர்களது திருமண நாளாகும். அந்த நாளில் மட்டுமே அவர்கள் முழுமையாக தண்ணீரில் குளிப்பார்கள். அதன்பின் வாழ்நாள் முழுவதும் வேறு எந்த நேரத்திலும் தண்ணீர் குளியல் மேற்கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மரணம் இயற்கை அல்ல... அது கொல்லும் காகுவா பேய்கள்! பெண்களுக்கு நரக வாழ்க்கை! இன்றும் நரமாமிசம் உண்டு, 140 அடி உயரத்தில் வாழும் மர்ம மனிதர்கள்..!!!

புகையால் மேற்கொள்ளப்படும் சுத்தப்படுத்தும் முறை

தண்ணீரைப் பயன்படுத்தாமல் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள, அவர்கள் தனித்துவமான முறையை பின்பற்றுகின்றனர். சில மூலிகைகள் மற்றும் மரக்கட்டைகளை எரித்து, அதிலிருந்து எழும் புகை மற்றும் ஆவியை உடலுக்கு காண்பித்து புகைக் குளியல் மேற்கொள்கிறார்கள். தகவலின்படி, இந்த முறை உடல் துர்நாற்றத்தைக் குறைப்பதோடு கிருமிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

சிவப்பு மண் கலவையின் சிறப்பு

மேலும், கடுமையான வெயில் மற்றும் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பு பெற விலங்குகளின் கொழுப்புடன் ஹேமடைட் எனப்படும் சிவப்பு நிற மண்ணை கலந்து உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் தோல் சிவப்பு நிறத்துடன் பொலிவாகத் தோன்றுகிறது. இயற்கை வளங்களை மட்டுமே பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கும் இந்த வாழ்க்கை முறை, ஹிம்பா பெண்களை உலகின் மிகவும் தனித்துவமான பழங்குடியின பெண்களாக அடையாளப்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: அட அட... இரவு நேரக் குளியலால் இவ்வளவு நன்மைகளா? சீனர்களின் ரகசியம் இதுதானாம்... மருத்துவ ரீதியாகவும் அதுதான் உண்மையாம்!!!