தமிழகம்

செப்டம்பர் 7 முதல் 9 சிறப்பு ரெயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

Summary:

Coming 7 onwards 9 special train going regularly

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது பொது போக்குவரத்து வசதி வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து செப்டம்பர் 1 முதல் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது.

தற்போது செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 9 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை - கோவை இடையே 3 சேவைகளும் , சென்னை - திருச்சி மற்றும் கோவை - மயிலாடுதுறை இடையிலும் தினசரி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் சென்னை - மதுரை இடையே 2 சேவைகளும் , சென்னை - காரைக்குடி , சென்னை - தூத்துக்குடி இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. மேலும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.


Advertisement