நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்க அனுமதி.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்க அனுமதி.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!



college will open

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தநிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில், “கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலை கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள்(இளநிலை, முதுநிலை) டிசம்பர் 7 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. 

college

ஆனால் 2020 - 2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி ஒன்றாம் தேதிமுதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.