தமிழகம்

ஓடும் பேருந்து மேல் ஏறி குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவர்கள்! பொதுமக்கள் உதவியுடன் போலீசார் செய்த செயல்!

Summary:

college students dance on bus


சென்னை மந்தைவெளியில் இருந்து பிராட்வே நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில், ராயப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில், கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து புறப்பட்டு, சென்று கொண்டிருந்தபோது, திடீரென 2 மாணவர்கள் மட்டும் பேருந்தின் ஜன்னலில் தொங்கி நின்றபடி, தாளம் போட்டபடி, பாட்டு பாடிக்கொண்டு பயணம் செய்துள்ளனர்.

பேருந்து அண்ணாசாலை வந்த உடன் இரண்டு மாணவர்களும் தங்களையே மறந்து பேருந்தின் மேற்கூரை மீது ஏறி நடனமாடினர். இதை பார்த்த பொதுமக்கள்  அச்சமடைந்து திருவல்லிக்கேணி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாணவர்களை பிடிக்க போலீசார் சிம்சன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

அந்த பேருந்து சிம்சன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது போலீசாரை பார்த்த மேற்கூரையில் நின்று ஆடிய இரண்டு மாணவர்களும் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடிஏ ஆரம்பித்துள்ளனர். போலீசார் அவர்களை விடாமல் துரத்தி, சுற்றி வளைத்து அந்த 2 மாணவர்களையும் மடக்கி படித்தனர்.

இதனையடுத்து அந்த மாணவர்களின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அவர்களிடம் எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். சென்னையில் சமீபத்தில் பேருந்து மீது ஏறி ஆடிய மாணவர்கள் திடீரென கீழே விழுந்த சம்பவம் நடைபெற்றநிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடைபெற்றது பொதுமக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.


Advertisement