திருமணமான நபருடன் காதல்... செல்போன் கடையில் தற்கொலை செய்த கல்லூரி மாணவி.!! பகீர் பின்னணி.!!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் தர்ஷினி (18 ). விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் ஒரு செல்போன் விற்பனை கடையில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் தனது காதலனுடன் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடையின் பின்புறம் உள்ள அறையில் தற்கொலை செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கடையில் வேலை புரிந்த ராஜ்குமார் என்ற ஊழியர் வேலையை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். இதனால் சோகமடைந்த தர்ஷினி அவரிடம் மணிக்கணக்கில் போனில் பேசியுள்ளார் .

இந்நிலையில் ராஜ்குமாருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன என்ற தகவல் தெரிந்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். போனில் கடைசியாக பேசிக் கொண்டிருந்த ராஜ்குமார் தலைமறைவாக இருப்பதினால் அவரை கைது செய்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... கள்ள உறவில் வாக்குவாதம்.!! இளம் பெண் கொடூர கொலை.!!
இதையும் படிங்க: இரண்டு நாட்கள் திடீரென மாயமான 10ஆம் வகுப்பு மாணவி! இன்று காலை கிணற்றில் கொடூரமாக கிடைத்த மாணவி! அதிர்ச்சி சம்பவம்...