நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
இரண்டு நாட்கள் திடீரென மாயமான 10ஆம் வகுப்பு மாணவி! இன்று காலை கிணற்றில் கொடூரமாக கிடைத்த மாணவி! அதிர்ச்சி சம்பவம்...
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்தாஸ். அவரின் மூத்த மகள் இசானி (வயது 15), அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 19 ஆம் தேதி, நண்பியிடம் இருந்து புத்தகம் வாங்கும் காரணமாக வெளியே சென்ற இசானி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் தேடத் தொடங்கிய நிலையில், இன்று காலை வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் பள்ளி சீருடை அணிந்த சிறுமியின் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு, அது இசானியின் சடலமென்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், இசானி தனது செல்போனை அதிகம் பயன்படுத்தியதாகவும், இதனால் பெற்றோரால் கண்டிப்புக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது. இது ஒரு தற்கொலை என சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், அனைத்து கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இசானியின் மரணம், அந்த பகுதியை பெரும் சோகத்திலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: துபாயில் வேலை பார்க்கும் கணவர்! பட்டப்பகலில் கேட்ட அலறல் சத்தம்! பகீர் சம்பவம்...
இதையும் படிங்க: திருமணம் ஆகி 3 மாதம் தான்! தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ! காரில் வெளியே சென்ற புதுப்பெண்! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!