கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
படிப்பை முடிச்சதும்தான் கல்யாணம்.! காதலனுடன் போனில் பேசிவிட்டு கல்லூரி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு.! சோக சம்பவம்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை என்ற பகுதியில் வசித்து வருபவர் கணேச மூர்த்தி. இவரது மகள் 19 வயது நிறைந்த கிருத்திகா. கடலூரில் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கிருத்திகா தனது மாமா மகனை கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி தங்களுக்கு திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் கல்லூரி படிப்பை முடித்த பிறகு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கிருத்திகாவிடம் கூறியுள்ளனராம். ஆனால் கிருத்திகா திருமணம் செய்து வைக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் அவர் பெற்றோருடன் கோபமாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று கம்ப்யூட்டர் க்ளாஸ் சென்று வீடு திரும்பிய கிருத்திகா தனது மாமா மகனுக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் தான் வீட்டிற்கு செல்லவில்லை. ரயில் நிலையத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் உடனே கிருத்திகாவின் பெற்றோருக்கு போன் செய்து கூறியுள்ளார். இதற்கிடையில் கிருத்திகா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.