பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் செய்த புதுக்கோட்டை மாணவன்! பொதுமக்களின் கொந்தளிப்பால் போலீசார் அதிரடி!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக் டாக் செய்த புதுக்கோட்டை மாணவன்! பொதுமக்களின் கொந்தளிப்பால் போலீசார் அதிரடி!


college student arrest for Tiktok video issue

இந்தியா முழுவதும் பலர் “டிக் டாக்” செயலியை பயன்படுத்தி வீடியோ தயார் செய்து வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் இதனையே பொலப்பாகவும் வைத்துள்ளனர். இந்த செயலால் பலர் உயிரையும் விட்டுள்ளனர்.

செல்பி மோகம், டிக் டாக் மோகம் இப்படி தங்கள் உயிரையும் பணயம் வைத்து சில இளைஞர்கள் செய்யும் காரியம் பார்ப்போரை பதறவைக்கும் விதமாக உள்ளது. இவ்வாறு “டிக்டாக்” செயலி மூலம் வீடியோ தயார் செய்து வெளியிடும் சிலர் மற்றவர்களின் மனம் புண்படும் வகையிலும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

சமீபத்தில், ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனை பார்த்த பலரும் அந்த இளைஞரை திட்டி தீர்த்தனர்.

Tiktok

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் டிக்டாக் வீடியோவில் அதிக வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

கல்லூரி மாணவன் கண்ணன் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார். மேலும், இந்த மாணவர், பொதுமக்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது இடிப்பது, அவர்களின் முன்பு முகம் சுளிக்கும் வகையில் நடனம் ஆடுவது, அவர்களை தள்ளி விடுவதுபோல “டிக் டாக்” செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

இதனிஆயடுத்து அப்பகுதி மக்கள் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் போலீசார் கண்ணனை கைது செய்தனர்.