கல்லூரி மாணவி கற்பழிப்பு, தற்கொலை... போலிச் சாமியார் கைது.. பதறவைக்கும் சிபிசிஐடி தகவல்..!

கல்லூரி மாணவி கற்பழிப்பு, தற்கொலை... போலிச் சாமியார் கைது.. பதறவைக்கும் சிபிசிஐடி தகவல்..!


college-girl-rape-in-thiruvallur

ஆசிரமத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினரால் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளான்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோட்டை ஆசிரமத்தில் முனுசாமி என்பவர் நடத்திவரும் ஆசிரமத்தில், கடந்த பிப்ரவரி மாதம் மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், ஆசிரமம் நடத்திவந்த சாமியார் முனுசாமி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது அம்பலமானது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனுசாமியை தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாகினர்.

thiruvallur

இந்த வழக்கு விசாரணை தமிழக அரசால் சிபிசிஐடி வசம் மாற்றப்பட்ட நிலையில், விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி காவல்துறையினர் முனுசாமியை கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையில் அந்த மாணவிக்கு நாகதோஷம் இருப்பதாக பெற்றோரிடம் கூறி அடிக்கடி ஆசிரமத்திற்கு அழைத்து சாமியார் முனுசாமி பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியது அம்பலமானது.