தமிழகம்

கஜா எதிரொலி: மதுரை காமராஜர் மற்றும் பெரியார் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Summary:

college exams suspended

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல், நாகப்பட்டினம்-வேதாரண்யம் இடையே நள்ளிரவு தொடங்கி அதிகாலையில் கரையை கடந்ததது. புயல் கரையை கடந்தபோது, அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் மணிக்கு 111 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் அப்படியே நகர்ந்து புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதில், மரங்கள் வீடுகள், மின்சார கம்பங்கள் மீது முறிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கஜா புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால், சில பகுதிகளில் இன்னும் மழை தொடர்கிறது. இதனால், தமிழகத்தின் 22 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தேனி, திருவண்ணாமலை, மதுரை, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையை தவிர மற்ற பகுதிகளில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Advertisement