வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
அசுரவேகத்தில் வந்த இளைஞன்! தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த இளம் பெண்! நெஞ்சை உருக்கும் சோகம்!
கல்லூரிக்கு செல்ல தந்தையுடன் பைக்கில் சென்ற மாணவி தந்தை கண்முன்னே விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் கீர்த்திகா. இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்துவந்துள்ளார்.
சமபவத்தன்று தனது தந்தையுடன் பைக்கில் கல்லூரிக்கு சென்றுள்ளார் கிருத்திகா. அந்நேரம், இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக்கில் வந்துள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அவரது வண்டி சீனிவாசன் சென்ற வண்டியின் மீது மோதியுள்ளது.
இதில் கீழே விழுந்த கிருத்திகா சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவரது தந்தை சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விபத்து தானாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா எனவும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.