சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
ஆ., படம், போட்டோ அனுப்பு.. மாணவ - மாணவிகளிடம் அத்துமீறிய கணினி ஆசிரியர்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வரும் நபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இன்று காலை மாணவ - மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணையவழி வகுப்பின் போது ஆசிரியர் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, ஆபாச புகைப்படத்தை கேட்டு வற்புறுத்தியது தொடர்பான குற்றசாட்டுகளை முன்வைத்த மாணவ - மாணவிகள் புகார் அளித்தனர்.

ஆசிரியர் மாணவ - மாணவிகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாக வைத்து நடவடிக்கை எடுக்க கூறி கோரிக்கை வைத்த நிலையில், அவரை கைது செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். புகார்களை பெற்று ஆசிரியரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் களமிறங்கியுள்ளனர்.