முகத்தில் 20,000 தேனீக்களை தாடி வடிவில் அமர்ந்தப்படி நின்ற மாணவி! விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ..... அச்சமின்றி செய்த திகில் முயற்சி!!!



coimbatore-student-bee-awareness-viral-video

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவி ஒருவர், சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு செய்த துணிச்சலான விழிப்புணர்வு முயற்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 20 ஆயிரம் தேனீக்கள் தனது முகத்தில் தாடி வடிவில் அமர்ந்தபடி நின்ற மாணவி பாக்கியலட்சுமியின் வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வரும் பாக்கியலட்சுமி, தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அம்மாடியோவ்... ஒரு பைக்கில் 240 கிலோ எடையை ஏற்ற முடியுமா? அடுக்கு அடுக்கா அடுக்கி தள்ளுராரே! மிரளவைக்கும் வைரல் வீடியோ..!!

பெண்களும் தைரியமாக ஈடுபடலாம்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து பேசிய பாக்கியலட்சுமி, “தேனீ வளர்ப்பு நல்ல வருமானம் தரக்கூடிய தொழில். பெண்களும் அச்சமின்றி இந்தத் துறையில் தைரியமாக செயல்பட முடியும் என்பதை எடுத்துக்காட்டவே இந்த முயற்சி” என்று தெரிவித்தார்.

அவரது தன்னம்பிக்கையும் அமைதியான அணுகுமுறையும் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தேனீக்களின் பங்கு

விவசாயத்தில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கும், உணவுச் சங்கிலி சீராக இயங்குவதற்கும் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கவும் அவை அவசியமானவை என நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேனீக்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மாணவி பாக்கியலட்சுமியின் முயற்சி மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இணையத்தில் குவியும் பாராட்டுகள்

பாக்கியலட்சுமி மேற்கொண்ட இந்த வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் அவரது முயற்சியை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இத பார்க்கவே முடியல.... எப்படி சாப்புடுறது! காலில் கத்தியை வைத்து இறைச்சி வெட்டும் நபர்! அதிர்ச்சி வீடியோ..!!!