#Breaking: காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய MyV3Ads நிறுவனர் சக்தி ஆனந்தன் உட்பட பலர் கைது.!

#Breaking: காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய MyV3Ads நிறுவனர் சக்தி ஆனந்தன் உட்பட பலர் கைது.!



Coimbatore MyV3Ads owner Sakthi Arrested 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில், Myv3Ads என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மக்களின் அறியாமையை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. 

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நிறுவனத்திற்கு ஆதரவாக பலரும் திரண்டு போராட்டம் செய்ததால், Myv3Ads நிறுவனம் தமிழகமெங்கும் பிரபலமானது. 

இந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன், நாங்கள் மோசடி செய்யவில்லை என்ற வாதத்தை முன்வைத்து, பிரச்சனையை தனக்கு சாதகமாக்கி நிறுவனத்தை தொடர்ந்து வளர்த்து வருகிறார். ஆனால், அவர்கள் முன்னதாக நடத்திய நிறுவனத்தில் பணம் இழந்ததாக பலரும் தற்போது புகார் அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று தனது நிறுவனத்திற்கு எதிராக போலி விமர்சனத்தை முன்வைத்து வருவதாக சக்தி ஆனந்தன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்திருந்தார். அச்சமயம் மாநகர காவல் ஆணையர் வெளியில் இருந்ததால், அடுத்த வாரம் புகார் அளிக்க வருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த சக்தி ஆனந்தன், தனது ஆதரவாளர்களுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள், 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்தனர். இவர்களுடன் சக்தியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.