"இங்க இருந்து காப்பியடிக்க வேணாம்.. இங்க வந்தே எடுங்க" அட்லீயை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.!
கோவிலில் மதுகுடிப்பதை தட்டிக்கேட்டவர் கல்லால் அடித்தே கொலை : கோயம்புத்தூரில் பயங்கரம்.. பரபரப்பு சம்பவம்.!
கோவிலில் மதுகுடிப்பதை தட்டிக்கேட்டவர் கல்லால் அடித்தே கொலை : கோயம்புத்தூரில் பயங்கரம்.. பரபரப்பு சம்பவம்.!

மதுபானத்தை கோவிலுக்குள் வைத்து அருந்தாமல் வேறெங்கும் சென்று அருந்துங்கள் என்று இளைஞரை கண்டித்த கூலித்தொழிலாளி கல்லால் அடித்தே படுகொலை செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மலையாண்டி பட்டணம் கிராமத்தில் வசித்து வருபவர் சோமசுந்தரம் (வயது 40). இவர் கூலித்தொழிலாளி ஆவார். கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவரின் வீட்டருகே உள்ள பகவதி அம்மன் கோவிலில் உறங்குவது வழக்கம்.
இந்நிலையில், சம்பவத்தன்றும் சோமசுந்தரம் உறங்க கோவில் மண்டபத்திற்கு சென்ற நிலையில், தனது நண்பரான பூபதி என்பவருடன் பேசிக்கொண்டே உறங்கியுள்ளார். அப்போது, இளைஞர் ஒருவர் மதுபாட்டிலுடன் மண்டபத்திற்கு வந்து மதுபானம் அருந்தியுள்ளார்.
இதனைக்கண்ட சோமசுந்தரம் வாலிபரை கண்டித்து கோவில் மண்டபத்தில் வைத்து மது அருந்த வேண்டாம். வேறொரு இடத்திற்கு சென்று அருந்துங்கள் என்று அறிவுரைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் சோமசுந்தரத்தை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கல்லை எடுத்து தலையில் அடித்துள்ளார்.
படுகாயமடைந்த சோமசுந்தரம் இரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழ, அவரை மீட்ட பொதுமக்கள் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக கோட்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சோமசுந்தரத்தை கொலை செய்த இளைஞர் சூளேஸ்வரன்பட்டியில் வசித்து வரும் ராம்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.