ஆப்பிரிக்க பெண்ணை கரம்பிடித்து கோவை எஞ்சினியர்.. பணியிட காதல் 2 நாட்டுக்கே பாலம் போட்ட நெகிழ்ச்சி..!Coimbatore Man Married Africa Girl

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரின் மனைவி தர்மலட்சுமி. தம்பதிகளின் மகன் முத்து மாரியப்பன். இவர் டிப்ளோமா மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு, மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் கேமரூனில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், இவர் பணியாற்றி வந்த பகுதியில் வசித்து வந்த எம்மா எஞ்சிமா மோசோகே என்பவரின் மகளான வால்மி இனங்கா மோசோகே என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. வால்மி கிருத்துவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், தங்களின் காதலை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

பிள்ளைகளின் மனதை புரிந்துகொண்ட பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவே, வால்மி இந்தியாவில் திருமணத்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கோயம்புத்தூர் வருகை தந்த வால்மி குடும்பத்தினர் முன்னிலையில், நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. 

இந்த திருமணத்தில் இருதரப்பு உறவினர்களும் கலந்துகொண்டனர். இந்து முறைப்படி மங்கள இசைகள் வாசிக்க, பெண்ணை பல்லக்கில் அழைத்து வந்து ஹோமம் வளர்த்து திருமணம் நடந்தது.