கரண்டு கட்டும்.. கள்ளக்காதல் ஜோடி ஜல்சாவும்.. குளக்கரையில் அரங்கேறும் கூத்து.. வேடிக்கை பார்த்து ரசித்த இளைஞர்.!
கள்ளக்காதல் ஜோடிகளுக்காக மின்சாரத்தை துண்டித்து, அவர்களின் தனிமையை வேடிக்கை பார்க்கும் குணம் கொண்ட நபர் கைது செய்யப்பட்டார்.
சீரமைப்பு:
கோயம்புத்தூர் நகரில் உள்ள குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வாளாங்குளக்கரை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த குளக்கரையில் ஊஞ்சல், நடைபாதை, இருக்கை இருக்கின்றன.
இதையும் படிங்க: நள்ளிரவில் பெண்ணை கடத்தி பலாத்கார முயற்சி.. காரில் இருந்து குதித்து காட்டிற்குள் ஓடிய இளம்பெண்..!
பாதுகாவலர்கள்:
இந்த குளக்கரை இரவு நேரத்தில் இளம் ஜோடிகள் மற்றும் கள்ளக்காதல் உறவில் இருக்கும் நபர்களின் கூடாரமாக இருப்பதாக புகார் வருகிறது. இவர்கள் இரவு நேரங்களில் குளக்கரையில் இருந்து பேசுவதும், எல்லை மீறிய செயலிலும் ஈடுபட்டு வந்ததால் ஒருகட்டத்தில் குளக்கரையை பாதுகாக்க பாதுகாவலர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு:
இதனிடையே, சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணியளவில் சம்பவ இடத்திற்கு மறைமுகமாக வந்த வாலிபர், மின்சார கேபிளை துண்டித்துக்கொண்டு இருந்தார். இதனைப்பார்த்த பாதுகாவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் சிக்கவில்லை. பின் நள்ளிரவு 1 மணியளவில் அதே வாலிபர் மின்சார கேபிளை துண்டித்துக்கொண்டு இருந்தார். இருளில் மறைந்தபடி இருந்தார்.
சிக்கினார்:
இவரை கையும்-களவுமாக பிடித்த பாதுகாவலர்கள் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், இளைஞர் இளம் தம்பதிகள், கள்ளக்காதல் ஜோடிகள் லீலையில் ஈடுபடுவதை மறைந்திருந்து பார்க்கும் குணம் கொண்டவர் என்பது தெரியவந்தது. அவர்களின் லீலையை பார்க்கும்போது, இவரை யாரும் கண்டறிந்துவிடக்கூடாது என்பதற்காக மின்கேபிளை துண்டித்து லைட்டை நிறுத்தியதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கணபதி பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்ற 22 வயது நபரை கைது செய்த அதிகாரிகள் பைக், ஐபோன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: டிஎஸ்பி ஆபிஸ் அருகிலேயே கொடூரம்.. 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை.. போதை ஆசாமியின் திடுக் செயல்.!