டிஎஸ்பி ஆபிஸ் அருகிலேயே கொடூரம்.. 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை.. போதை ஆசாமியின் திடுக் செயல்.!



in Tirupattur 50 Year Old Girl Sexually Abused In Park Near by DSP Office 

அதிகாலையில் வேலைக்குச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் டிஎஸ்பி அலுவலகம் அருகில் நடந்துள்ளது.

அதிர்ச்சி சம்பவங்கள்:

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில், சமீபத்தில் பெண் வியாபாரி கொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட்டது. சம்பவ இடத்திற்கு அருகில் சிசிடிவி கேமிரா இல்லாத நிலையில், அதிகாரிகளுக்கு குற்றவாளியை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. அரசு அலுவலகம், பள்ளி என மக்கள் நடமாட்டம், காவல்துறையினரின் கண்காணிப்பு இருக்கும் பகுதியில் நடந்த சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

வேலைக்குச் சென்றார்:

இதனிடையே, பெண் வியாபாரி கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருப்பத்தூரைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்மணி அதிகாலை நேரத்தில் வேலைக்குச் செல்வதற்கு புறப்பட்டு வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம், டி.எஸ்.பி அலுவலகம் அருகேயுள்ள வீரபத்திர முதலியார் பூங்காவை கடந்து சென்றுகொண்டு இருந்தார்.

Crime news

பாலியல் வன்கொடுமை:

இந்த நேரத்தில் அவ்வழியே வந்த போதை இளைஞர் பெண்ணை வழிமறித்து இருக்கிறார். பெண் கூச்சலிட முயன்றபோது, அவரின் வாயை பொத்தி பூங்காவுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். பின் இதுகுறித்து பெண்மணி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அங்குள்ள கல்நார்ச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சரத்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இளைஞரை அதிகாரியாக கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: காதலனை நம்பி வீட்டை விட்டு புறப்பட்ட 12 வயது சிறுமி.. ஒரு வாரத்தில் நடந்த அவலம்.. திருப்பூரில் ஷாக்.!