சட்டெனெ திரும்பிய அரசு பேருந்து..! பக்கவாட்டில் வந்த இருசக்கர வாகனம்..! கண் இமைக்கும் நொடியில் நடந்த பகீர் சம்பவம்..!

சட்டெனெ திரும்பிய அரசு பேருந்து..! பக்கவாட்டில் வந்த இருசக்கர வாகனம்..! கண் இமைக்கும் நொடியில் நடந்த பகீர் சம்பவம்..!


Coimbatore kandhinagar bus accident CCTV footage

கோவை காந்திபுரத்தில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் அருகே நேராக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து ஓன்று பின்புறம் வரும் இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் திடீரென திரும்பியுள்ளது.

பேருந்து திரும்ப போவதை உணராமல், இருசக்கர வாகனத்தில் வரும் நபரும் வேகமாக பேருந்தை கடக்க முயல்கிறார். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொள்ள பேருந்து ஓட்டுனரும் உடனே பேருந்தை நிறுத்துகிறார்.

இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனம் முற்றிலும் நொறுங்கிய நிலையில் சிறிதுகூட காயம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிர் பிழைத்துள்ளார். இது குறித்த வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாத நிலையில், சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.