தாய் பேசவில்லை என்றால் மகன் என்ன செய்வான்? - 5 வயது மகனை சித்ரவதை செய்த தந்தை.!
தாய் பேசவில்லை என்றால் மகன் என்ன செய்வான்? - 5 வயது மகனை சித்ரவதை செய்த தந்தை.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை, அறிவொளிநகர் பகுதியில் வசித்து வருபவர் சாதிக் பாஷா. இவரின் மனைவி ரெஜினா பானு. தம்பதிகள் இருவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. தம்பதிகளுக்கு முகமது அசாருதீன் என்ற 10 வயது மகனும், முகமது அர்சத்தீன் என்ற 5 வயது மகனும் உள்ளனர்.
கணவன் - மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 2 வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், மூத்த மகன் ரெஜினா பானுவுடனும், இளைய மகன் சாதிக் பாஷாவுடனும் இருக்கின்றனர். இந்நிலையில், சாதிக் பாஷா தனது இளையமகன் முகமது அர்ஷத்தினை கொடுரமாக அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகின.
இந்த விஷயம் தொடர்பாக மதுக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சாதிக் பாஷாவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், தான் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய நிலையில், அவருக்கு செல்போனில் தொடர்பு கொள்கையில் எனது அழைப்பை எடுக்காமல் இருக்கிறார்.
மகன் மட்டும் தாயை சந்தித்து பேசி வருகிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகனை தாக்கினேன் என்று தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மதுபோதையில் வீட்டிற்கு வரும் சாதிக் பாஷா தினமும் மகனை அடித்து கொடுமை செய்து வருவது அம்பலமானது. கைது செய்யப்பட்ட சாதிக் பாஷா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.