ராகுல் காந்தி கைது விஷயத்தில் பொங்கி எழுந்த முதல்வர் விஜய்! டெல்லி சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு... எக்ஸ் தளத்தில் வெறியோடு வெளியிட்ட பதிவு..!!!



cm-vijay-condemns-rahul-gandhi-arrest-neet-protest

டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட விவகாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்து, ஒன்றிய அரசின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி கைது; விஜயின் கடும் எதிர்ப்பு

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஏற்க முடியாத நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை கைது செய்வது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்றும், ஒன்றிய அரசின் அடக்குமுறை அணுகுமுறையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்த வாழ்த்து செய்தி! ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!!!

இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நீட் ஒழிப்பே த.வெ.க.வின் நிலைப்பாடு

நீட் தொடர்பாக தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் விளக்கிய விஜய், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே த.வெ.க.வின் சமரசமற்ற கொள்கை எனத் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்படும் இந்தத் தேர்வை வைத்து அரசியல் லாபத்திற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

நீட் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அதில் சட்டரீதியான சிக்கல்கள் இருந்தால், இடைக்காலத் தீர்வாக 'Special Concurrent List' உருவாக்கி கல்வி மற்றும் மருத்துவக் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.

மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் எதிர்பார்ப்புகளையும் ஒன்றிய அரசு மதிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்த விவகாரத்திற்கான ஒரே தீர்வு என்றும் விஜய் தனது அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

 

இதையும் படிங்க: பொது மேடையில் ஆபாச வார்த்தைகளை பேசிய திமுக நிர்வாகி! கேக்கவே காது கூசுது..... அதிர்ச்சி வீடியோ..!!!