தமிழகம்

தேர்வு எழுதாமலே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்..! தமிழக முதல்வர் அறிவிப்பு..!

Summary:

Classes 1 to 9 all pass in tamilnadu due to corono

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க அணைத்து நாடுகளும் பலவேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கையாளப்பட்டுவருகிறது.

ஏற்கனவே அணைத்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்றில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்திலையே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வுகள் தற்போதுவரை நடைபெறவில்லை.

இந்நிலையில், ஆண்டு இறுதி தேர்வு இல்லாமலே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அணைத்து மாணவ மாணவிகளையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று நடைபெற்ற 12ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement