பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரனுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கி உள்ளது.

2 வயதேயான குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரனுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இன்றைய சூழலில் எங்கு பார்த்தாலும் பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு நிகழ்ந்தவண்ணமே உள்ளது. நாளுக்குநாள் இந்த கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த ஒரு மோசமான நிலைமையில் நாள்தோறும் நாம் பெண்கள், கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள், என தான் கேள்விப்படுகிறோம் ஆனால், தற்பொழுது பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை பார்க்கும்பொபழுது அனைவரின் மனமும் பதைபதைக்கிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனிசாமி என்பவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றம் சுமத்தப்பட்ட பழனிசாமிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
பச்சிளம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த நபருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர். இன்னும் ஒரு தரப்பினர் அந்த நபருக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகின்றனர்.