தமிழகம்

வீட்டில் உள்ளவர்களின் கவனக்குறைவு.! மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.!

Summary:

பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு 6 வயதில் யாழினி என்

பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு 6 வயதில் யாழினி என்ற மக்கள் இருந்துள்ளார். இந்தநிலையில் யாழினி  அப்பகுதியில் உள்ள அரசு தொடக்க தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவலால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் சிறுமி யாழினி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் வெங்கடேசன் வீட்டு அருகே அருணாசலம் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் அவரது வீட்டின் முன்பு தண்ணீருக்காக போர் அமைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் சிறுமி யாழினி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது போர் அமைக்கப்பட்டிருந்த மின்சார வயரில் யாழினி தவறி கை வைத்துள்ளார்.

சிறுமி அந்த வயரில் கை வைத்த உடனே மின்சாரம் பாய்ந்ததில் சிறுமி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி யாழினி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் இருந்தவர்களின் கவன குறைவே சிறுமி பலிக்கு காரணமாக அமைந்துவிட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement