தமிழகம்

ஜூஸ் என நினைத்து மதுவை குடித்த சிறுவன்.! குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! எச்சரிக்கை செய்தி.!

Summary:

ஜூஸ் என நினைத்து மதுவை குடித்த சிறுவன்.! குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! எச்சரிக்கை செய்தி.!

வேலூர் மாவட்டம், திருப்பாக்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னசாமி. இவரது மகன் சுந்தரம், மகள் விஜயா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சின்னசாமி தினமும் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாலை சின்னசாமி வீட்டில் மது குடித்துவிட்டு மீதமிருந்த மது மற்றும் தின்பண்டங்களை அங்கேயே வைத்துவிட்டு தூங்கி உள்ளார்.  

அந்த சமயத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பேரன் ருத்ரேஷ், அங்கிருந்த தின்பண்டத்தை சாப்பிட்டுள்ளான். மேலும், அங்கிருந்த மதுவையும் குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளான். சிறுது நேரம் கழித்து சிறுவனுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. சிறுவன் மது அருந்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த சின்னசாமி சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் சின்னசாமியை கடுமையாக திட்டியுயள்ளார். மேலும், சிறுவனின் உடல்நிலை மோசமானதால் அதிர்ச்சியடைந்த சின்னசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைபலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement