முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவு.! ஸ்டாலின் இரங்கல்.!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவு.! ஸ்டாலின் இரங்கல்.!



Chief Minister Edappadi Palanisamy's mother passes away

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) கடந்த வெள்ளிக்கிழமையன்று முதுகு தண்டுவடம் பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று காலை அதிகாலை 1.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. தாயாரின் மறைவு செய்தியறிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கார் மூலம் சிலுவம்பாளையம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் தனது தாயாரின் உடலுக்கு அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடலுக்கு கிராம மக்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து காலை 9.30 மணியளவில் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் தவசாயி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு, முதல்வரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.